உலக நாயகன் இயக்கி நடித்து வெளியாகவிருக்கும் படமான விஸ்வரூபத்திற்கு 2ம் பாகமும் தயாராகிக்கொண்டிருக்கிறது என கமல் தெரிவித்துள்ளார்.
கடந்த 1 வருடத்திற்கு முன்பே விஸ்வரூபம் 2ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இப்படத்தில் நடிகை பூஜா குமார், ஒரு காட்சிகளில் நடித்து விட்டதாகவும் கமல் தெரிவித்திருப்பது திரையுலகிற்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது.
விஸ்வரூபம் முதல் பாகத்தையே திரையரங்குகளில் திரையிட மாட்டோமென அதிபர்கள் கூறி வரும் நிலையில்
தன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் கமல். |