திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஜப்பானைப் பற்றிய சில அழகான தகவல்களை தெரிந்து கொள்வோம்...







1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து 

ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் 


கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.



2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக 


வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் 


செல்வர்.



3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என 


அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 


8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல 


பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.



4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் 


வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு 


ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய 


பொருளாதார நாடாகும்.



5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான 


மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் 


கொடுக்கப்படுகிறது.



6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் 


அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் 


கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் 


கொள்வர்.



7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் 


ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை 


அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர 


பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.



8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை 


வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். 


உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.



9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த 


நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.



10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே 


அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக 


சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை 


மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.















ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

நித்தியானந்தாவுக்கு ஆயுதம் ஏந்திய கொம்மாண்டோ பாதுகாப்பு.






நம்ம நித்தி சுவாமிகள் மறுபடியும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார்.
அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆஜரானார், நித்தியானந்தா. திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 கூடாரங்களில், சினிமா செட் போல பளபளத்தது நித்தியின் சுமார் 100 பக்தர்களை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து இறக்கி அசத்தினார் நித்தி. நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைவில்லாத வசதிகளுடன் இருந்த நித்தியின் கூடாரத்தில், கடுமையான கட்டுக் காவல். அனுமதி இன்றி உள்ளே யாரும் நுழைய முடியாது.

ராஜக் குளியல் செய்வதற்காக நித்தி, ஆளுயர ரோஜா மாலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஊர்​வலமாக வந்தார். ஊர்வலத்துக்காக செட்டப் செய்யப்பட்டிருந்த ரதத்தில் நித்திக்காக வெள்ளி சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது.
நித்திக்குப் பாதுகாப்பாகத் துப்பாக்கி ஏந்திய இரு கமாண்டோக்களும் உடன் வந்தது அங்கு வந்திருந்த சாதுக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யார் இந்த வி.ஐ.பி. சாது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டனர்.

சரி.. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு கொடுத்தது யாரு? மத்திய அரசா? உ.பி. அரசா ?

நித்தி வட்டாரங்களில் விசாரித்தபோது, தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட பாதுகாப்பு என்றார்கள். இதற்கு அந்த மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏஜென்சியின் யூனிபார்மில் இல்லாமல், கமாண்டோ பாணியில் உடையணிந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது, நித்தி விடுத்த கோரிக்கையாம்! (அந்த டிரெஸ்ஸூக்கு மேலதிக கட்டணம் உண்டு)





வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

ரஸ்யாவில் விண்கல் வீழ்ந்த்து 400 பேர் படுகாயம் !!









ரஸ்யாவில் செலியாபின்ஸ்க் என்னும் இடத்தில் கால்பந்து மைதானத்தின் பாதி அளவு கொண்டதாக உள்ள விண்கல் வீழ்ந்தது இதில் 400 பேர் படு காயம் அதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக ரஸ்ய அரசு அறிவித்துள்ளது.

இன்று இரவு பூமியை கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவில் அக்கல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பேஸ்புக்கில் உங்கள் ரசனைக்கேர்ப்ப‌ நண்பர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் இணையம்.






மில்லியன் கணக்கான பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டு சிறப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது பேஸ்புக்.இதில் நண்பர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கு இணையத்தளமொன்று உதவுகிறது.



புதிய நகரத்துக்கு செல்லும் போது அங்கு பழகி கொள்ள புதிய நண்பர்கள் தேவை என்று நினைத்தால், இந்த தளத்தின் மூலம் தேடிக் கொள்ளலாம். இது பேஸ்புக் வலைப்பின்னலில் இருந்து நண்பர்களை தேடித்தருகிறது.

குறிப்பாக பரஸ்பர நண்பர்கள் வலைப்பின்னலில் இருந்து புதிய நண்பர்களை இது சல்லடை போட்டு தேடித்தருகிறது.

அது எப்படி என்றால், முதலில் பேஸ்புக் நண்பர்களின் நட்பு பட்டியலில் இருந்து அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள், அவர்களின் நட்பு வட்டங்களில் உள்ளவர்கள் என்று நண்பர்களின் நண்பர்களை எல்லாம் திரட்டிக்கொள்கிறது.

அதன் பின் இந்த நண்பர்கள் குவியலில் இருந்து நமக்கு பொருத்தமான நண்பர்களை தேடித்தருவது தான் இந்த தளத்தின் வேலை.

இருப்பிடம், குணாதிசயம், ரசனை, பழக்கவழக்கங்கள் என பல்வேறு அம்சங்களை அலசிப்பார்த்து தகுதி வாய்ந்த நண்பர்களை இந்த சேவை பரிந்துரைக்கிறது.

உதாரணமாக உங்கள் இருப்பிடம் அருகிலேயே உள்ள நண்பர்களை தேடிக்கொள்ளலாம், புத்தகம் படிப்பவர்கள் புத்தக ஆர்வம் உள்ளவர்களாக தேடிப்பார்க்கலாம்.

அவர்கள் புதியவர்கள் என்றாலும் உங்கள் நண்பனின் நண்பர் என்பதால் அதை சொல்லியே நீங்கள் அறிமுகமாகலாம் என்பதோடு அவர்களை தொடர்பு கொள்வது பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

இணையதள முகவரி

http://www.findyourlobster.com/








வியாழன், 7 பிப்ரவரி, 2013

இவர் சிறுமியைக் கற்பழித்தால் பாவம் இல்லையாம் !





மேலே உள்ள படத்தில் இருக்கும் மத போதகர், தனது சொந்த மகளை(5 வயது) கற்பழித்துள்ளார். இதனை தாங்க முடியாத அச் சிறுமி துடிதுடித்து வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள். ஆனால் கடந்த சனிக்கிழமை இந் நபர் வெளியே வந்துவிட்டார். இவர் மீது தற்போது எந்தக் குற்றமும் இல்லையாம் ! தவறுதலாக செய்த குற்றத்துக்கு இலங்கையைச் சேர்ந்த ரிஷானாவுக்கு மரண தண்டனை கிடைத்தது. ஆனால் தெரிந்தே செய்த குற்றத்துக்கு, எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை என்று யோசிக்கிறீர்களா ? வாருங்கள் விடையத்துக்குச் செல்லலாம் !

சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்திகள் கூறுகின்றன. அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் அன் நாட்டு அரசு அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. 

ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார். லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போதாக்குறைக்கு டி.என்.ஏ பரிசோதனைகளும் இதனை உறுதிசெய்தது. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லாமியா அல் கம்தி - வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை பரிசோதனையின் பொழுது கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமானவர் அவரது தந்தை என்ற விடயமும் பரிசோதனையின் பொழுது தெரியவந்தது. அது மட்டுமன்றி அவரது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில் ஒன்றிலிருந்து ஒரு நகம் கழட்டப் பட்டும்,தலையில் மண்டையோடு உடைந்தும் இருந்திருக்கிறது. (அவ்வளவு கொடூரமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார் இந்த ஆள்) அதிகாரிகளின் விசாரணையின்போது பைஹான் அல் கம்தி தான் தனது மகளைத் துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றாலும், சவூதி அரேபியாவில் அமுலில் இருக்கின்ற நீதிமன்றம் அவரது கொலைக்கு பரிகாரமாக குருதிப் பணத்தை தாய்க்கு வழங்குமாறு பணித்து அவரை விடுதலை செய்துவிட்டது.

இக்கொலைக்கு நட்டஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பைஹான் அல் கம்தி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தீர்ப்புக்கும் செய்கைக்கும் எதிராக "நான் லாமியா அல் கம்தி பேசுகிறேன்" என்ற தலைப்பில் உலகில் இருக்கின்ற பல சமூக சேவைகள் அமைப்புகள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கின்ற அமைப்புகள் களமிறங்கியுள்ளார்கள். ஆனால் , எது எவ்வாறு இருப்பினும் சவுதி அரசாங்கத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது ! இது தான் இஸ்லாத்தின் நியதியா என்று வேற்றின மக்களை கேட்க்கத் தோன்றும் அளவுக்கு, சவுதி அரசாங்கம் நடந்துள்ளது வெட்கப்படவேண்டிய விடையம் ஆகும். இவர்கள் போன்றவர்கள் மனிதப் பிறப்புக்களா என்று வெட்கி நாணும் அளவுக்கு இவர் செயல் அமைந்துள்ளது. போதாக்குறைக்கு தான் விடுதலையான பின்னர், அவர் தொலைக்காட்சியில் தோன்றி, ஊருக்கு உபதேசம் வேறு செய்துள்ளார் என்றால் பாருங்களேன் !

நன்றி அதிர்வு.காம்