திங்கள், 29 ஏப்ரல், 2013

FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை...



























இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் 

இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).
தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.
அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.
முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.
2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.
அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.
இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.
தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.
மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.
உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.
இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.






வெள்ளி, 26 ஏப்ரல், 2013

மடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு





இன்றைய காலகட்டங்களில் பலரும் சாதாரண கணனியை விட மடிக்கணனி, டேப்லட் போன்ற கையில் எடுத்துச் செல்லும் மின்னணு சாதனங்களையே பயன்படுத்த விரும்புகின்றனர்.


மடிக்கணனி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து டொக்டர் காமினி ராவ் விளக்கியுள்ளார்.

* மடிக்கணனி உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் வெப்பக் கதிர் ஆண்களை தாக்கி அவர்களின் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையின்மையை ஏற்படுத்துவதாகவும், மடிக்கணனியின் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளில் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளது என்றார்.

* 18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

* மேலும் அதிகமாக காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதில் உள்ள நச்சுப் பொருளால் உயிரணுக்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* நகர்ப்புறத்தில் இருக்கும் ஆண்களை விட கிராமப் புறத்தில் இருக்கும் ஆண்கள் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் படாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த ராவ், மாறி வரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப நாமும் சில மாற்றங்களை கையாண்டால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.

* இதன்படி முறையான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத்தாமை, புகை மற்றும் காபி அருந்தும் பழக்கத்தை கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.



சனி, 20 ஏப்ரல், 2013

நீயா நானா கோபிநாத்தின் பாஸ்வேர்ட் - 2




“சப்பையும் ஒரு ஆம்பளதான்... எல்லா ஆம்பளைகளும் சப்பைதான்!'' -'ஆரண்ய காண்டம்’.

''நமக்குப் புடிச்ச பொண்ண நாம பார்க்கிறப்போ, அந்தப் பொண்ணும் நம்மளப் பார்க்கிற மாதிரியே தோணும். ஏன்னா... நமக்கு அதுதான் வேணும்!'' - 'காதலில் சொதப்புவது எப்படி?’.

''ஸ்பேஸ்ல பேனா எழுதலைன்னா, பென்சில் யூஸ் பண்ணி இருக்கலாமே சார்... ரெண்டு ரூபாயோட முடிஞ்சிருக்குமே!'' - 'நண்பன்’.

''என் வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா!'' - 'பில்லா 2’.

''ஏணிய கூரை மேல போடாதீங்க... வானத்தை நோக்கிப் போடுங்க!'' -'சாட்டை’.

''ஒவ்வொரு தடவை வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும், 'தெரியாதவன்கிட்ட பார்த்துப் பழகுங்கடா... பார்த்துப் பழகுங்கடா’னு சொல்லுவாங்க. தெரிஞ்சவய்ங்க நீங்களே இப்படிப் பண்ணினா, யார்கிட்டடா பார்த்துப் பழகுறது?'' - 'சுந்தரபாண்டியன்’.

ஒவ்வொரு சினிமாவிலும் ஒவ்வொரு வசனம் நறுக் சுருக்னு மனசு தைக்கும். அப்படிச் சமீபத்தில் என்னைத் திடுக்னு உலுக்குனது 'நீதானே என் பொன்வசந்தம்’ டயலாக்...

''ரொம்ப நாளைக்கு அப்புறம் டிராஃபிக்ல ஒரு சிவப்பு சிக்னல்ல வெய்ட் பண்ண எனக்குப் பிடிச்சிருக்கு!''

உண்மையிலேயே 90 விநாடி வெறுமையாக அல்லது பொறுமையாகக் காத்திருக்க சிவப்பு சிக்னல்போல ஏதாவது வலுவான அல்லது காதலிபோல அழகான காரணங்கள் தேவைப்படுகின்றன. எல்லோரும் எப்போதும் ஏன் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்?

''என்னடா இது... இந்த மெட்ராஸ்ல எல்லாருமே ஏதோ நாய் துரத்துற மாதிரி இந்த ஓட்டம் ஓடுறானுக?'' - ஊரிலிருந்து வந்த நண்பன் என்னிடம் கேட்ட கேள்விக்கு, சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. இவன் நம்மையும் சேர்த்துத்தான் சொல்கிறான் என்று எரிச்சலாகச் சிரித்தேன்.

''அட... லவ் பண்ற பொண்ணை பைக்ல பின்னாடி வெச்சுக்கிட்டு இவ்வளவு வேகமா வெரட்டுறானே... விழுந்துகிழுந்து தொலைச்சா, ரெண்டு பேரும் வீட்டுல என்னடா சொல்வானுங்க?'' - மிகவும் நியாயமாகத்தான் மறுபடியும் கேட்டான் நண்பன். என்னால்தான் பதில் சொல்ல முடியவில்லை. வெறுப்பில் நானும் ஆக்சிலேட்டரைத் திருகினேன்.

ஏதாவது ஆர்ட் ஃபிலிம் பார்க்கும்போது ஒருவர் மிகவும் பொறுமையாக ஒரு மாட்டை ஓட்டி வந்து, அதை ஓர் இடத்தில் கட்டிவிட்டு, மெதுவாக நடந்து போய் வீட்டுக்குள் உட்காருகிற ஓர் அழகான லாங் ஷாட்டை உட்கார்ந்து பார்ப்பதற்கு இப்போதெல்லாம் படபடப்பாக இருக்கிறது. 'சீக்கிரம் மாட்டைக் கட்டித் தொலையேண்டா’ என்று மனசு கதறுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டரில் இருந்து உணவுப் பொட்டலம் வீசுவதைப் பல முறை செய்தி சேனல்களில் பார்த்தது உண்டு. இரண்டு நாள் கொலைப் பட்டினியில் இருக்கும் மக்கள், கூட்டம் கூட்டமாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வருவார்கள். இப்போது எல்.ஐ.சி. பில்டிங்கில் ஏறி நின்று அண்ணா சாலையைப் பார்க்க நேர்ந்தால், எப்போதும் அந்த 'கொலைப் பசி’ அவசரத்துடன்தான் ஓடிக்கொண்டு இருப்பார்கள் எல்லோரும்.

பயணத்தில், சாப்பாட்டில், வேலையில், கல்யாண வீடுகளில், கருமாதிக் காரியங்களில் என எங்கும் யாருக்கும் நேரமே இல்ல. 'பொணத்தத் தூக்கிட்டாங்கன்னா, கிளம்பிரலாமே!’ என்றுதான் நிறையப் பேர் அமர்ந்திருப்பார்கள்.

'மெதுவா நல்லா மென்னு தின்னுய்யா!’ என்று பாசம் பரிமாறுகிற அப்பத்தாக்கள் மீது 'த... என் அவசரம் புரியாம உளறாத’ என்று எரிந்துவிழுவதுதான் இப்போதைய டிரெண்ட். ஆனால், அப்பத்தாக்களுக்குமே இப்போது நேரம் இல்லையோ? டி.வி. முன்னால் கிடையாய்க் கிடக்கிறார்கள்.

'அரை மணி நேரத்துக்குள் பீட்ஸாவை டெலிவரி செய்ய வேண்டும்’, 'சாயங்காலம் 6 மணிக்குள் ஐந்து மெஷின் வித்தாகணும்’, 'இன்னும் 15 நாள்ல கிரெடிட் கார்டை 10 பேர் தலையிலாவது கட்டியாகணும்’, 'அமெரிக்க முதலாளி முழிச்சு இருக்கிறப்பவே, அசைன்மென்ட் முடிச்சாகணும்’, 'பயலுகளுக்குப் புரியுதோ இல்லையோ... அடுத்த மாசத்துக்குள்ள சிலபஸை முடிச்சாகணும்’, 'என்ன பண்ணுவீங்களோ... ஏது பண்ணுவீங் களோ 10 மணிக்குள்ள எல்லா ஃபைலும் என் டேபிளுக்கு வந்தா கணும்’ என்று டெட்லைன் பிசாசுகள் நம் தலை மேல் நின்றுகொண்டு 'தையத் தக்கா’ என்று குதிக்கின்றன.

எல்லாரும் இங்கே ஓடித்தான் ஆக வேண்டும். ஆனால், இப்படி ஓடி ஓடிச் செய்கிற எதையும் நாம் உருப்படி யாகச் செய்வது இல்லை என்பதுதான் ஆய்வுகளின் தகவல். காமாசோமா என்று குளிப்பதில் தொடங்கி, கடமைக்கென்று செக்ஸ் வைத்துக்கொள்வது வரை எதையுமே இந்தியர்கள் முழுதாகச் செய்வது இல்லை என்று படித்தபோது 'பக்’கென்று இருந்தது. டூ-வீலரை ஓட்டிக்கொண்டே செல்போனில் மெசேஜ் டைப் செய்யும்  ஆட்களை இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

80-களில் மேற்கு நாடுகள் இப்படித்தான் இருந்தன. செய்தித்தாள், காபி, சிகரெட்டோடு டாய்லெட்டுக்குள் போகிற ஆட்கள் வெளியேற்ற வேண்டியதை வெளியேற்றாமல் வெளியே வந்த காலம் அது. எல்லாரும் பித்துப் பிடித்த மாதிரி இருந்தார்களாம், இப்போது நாம் திரிகிற மாதிரி!

அந்தக் காலகட்டத்தில்,‘The Slow Movement’ என்றொரு பிரசாரம் தொடங்கியது. மேற்குலகில் அது ஒரு கலாசாரப் புரட்சி. வேகத்தைக் குறைத்து, ஒரு செயலை நிதானமாக (கவனிக்க: மெதுவாக அல்ல... நிதானமாக!) திருப்தியாகச் செய்துமுடிக்க வேண்டும் என்பதுதான் அந்த Slow Movementன் சாரம்.

ஒரு விஷயத்தை அனுபவித்து உணர்ந்து திருப்தியாகச் செய்வதே முக்கியம். அதீத வேகத்தை நிறுத்தி, மகிழ்வோடு உங்கள் பணிகளைச் செய்யுங் கள். இல்லையென்றால், காலம் முழுக்க ஓடினாலும் திருப்தி இல்லாத படபடப்பான அர்த்தமற்ற வாழ்க்கையே வாழ முடியும் என அந்த இயக்கம் பரப்புரை செய்தது.

இப்போதும் அதன் தாக்கங்களைப் பல நாடு களில் பார்க்க முடியும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் Eva Restaurant  என்றொரு ஹோட்டல் உண்டு. அங்கு சாப்பிட வருபவர்கள் தங்கள் அலைபேசிகளை ஹோட்டல் ரிசப்ஷனிலேயே விட்டுவிட்டு வந்தால், பில் தொகையில் 5 சதவிகி தத் தள்ளுபடி உண்டு. இதுபோன்ற திட்டங்களை நம் ஊர் ஹோட்டல்களிலும் அமல்படுத்துகிற நாட்கள் மிக அருகில்தான் இருக் கின்றன. ஆனால், அதற்கெல்லாம் காத்திருக்காமல் முதலில் நம் வீட்டுச் சாப்பாட்டு மேஜைகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தலாம்!

'வாய்ப்புகள் வா... வா... என்று அழைக்கும் இந்தக் காலத்தில் இப்படித் தான் ஓட வேண்டும்!’ என்பது ஒரு செயற்கையான பிரசாரம். ஒன்றைக் கூடச் சரியாகச் செய்யாமல் எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு வைப்பதில் என்ன புண்ணியம்?

இன்னோர் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்வதில் நாம் கொஞ்சம் மக்குதான். ஆனால், 'நான் ரொம்ப பிஸி!’ என்பதில் உள்ளுக்குள் பெருமையாக நினைத்துக்கொள்வோம் நாம். இதோ... பக்கத்தில் இருக்கும் திருச்சிக்கு ஃப்ளைட்டில் சென்று வந்ததற்கு அடையாளமாக 10 நாட்களாக என் சூட்கேஸில் அந்த லக்கேஜ் டேக் அப்படியே இருக்கிறது. 'பறந்து பறந்து வேலை பார்க்கிறேன்’ என்பதை உணர்த்தும் ஸ்டேட்டஸ் ஸ்டைலாம் அது!

உண்மையில் யார் ஒருவருக்கு எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய நேரம் இருக்கிறதோ... அவர் தான் பிஸியான மனிதர். அழுக்கு தேய்த்துக் குளிப்பதில் தொடங்கி, ஆற அமரச் சாப்பிடுவது வரை இதில் அடக்கம்.
'அட... எங்கங்க புள்ளகுட்டிகளைக் கொஞ்சவே நேரம் இல்ல’ என்று பெருமை பேசும் டகால்ட்டி பார்ட்டிகள் உடனடி Slow Movement-ஐ பின்பற்றுவது உத்தமம். இல்லையென்றால், மருத்துவமனைக்குச் செல்லவே நேரம் சரியாக இருக்கும் நிலை வரலாம்.

கல்யாண வீட்டுக்குப் போனால், கலகலவென சிரித்துப் பேசிச் சந்தோஷமாக இருங்கள். சாவு வீட்டுக்குப் போனால், துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள். அறைக் கதவைச் சாத்திக்கொண்டு பிள்ளைகளோடு டான்ஸ் ஆடுங்கள். ஆவி பறக்கிற இட்லியைப் பேய் மாதிரி முழுங்காமல், விள்ளல் விள்ளலாக பிய்த்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது, ப்ளஸ் டூ-வில் 1,190 மார்க் எடுப்பது, அமெரிக்காவில் வீடு வாங்குவது, 80 லட்சம் ரூபாய் கார் வாங்குவதெல்லாம் அப்புறம்.

நான் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வேன்... வாழ்தலின் நோக்கம்... வாழ்தல்தான். மத்ததெல்லாம் அப்புறம்!
ஆளில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆத்தப்போகிறோம்?

அவரவர் கோப்பையை ருசிப்போம் முதலில்!

நன்றி: ஆனந்த விகடன், கோபிநாத்,  கே.ராஜசேகரன் (படம்)







வியாழன், 18 ஏப்ரல், 2013

தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பொன்மனச்செல்வன் எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றி சில நினைவுகள்... (வீடியோ இணைப்பு)



தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பொன்மனச்செல்வன் எம்.ஜி.ராமச்சந்திரன் தன் மீது வைத்துள்ள‌ நம்பிக்கை மற்றும் பாசம் மற்றும் விடுதலைப்புலிகள் உருவாவதர்க்கு செய்த உதவிகள் பற்றி நினைவு கூறுகிறார்.









புதன், 17 ஏப்ரல், 2013

ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு !








 இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டுள்ளது. ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது:

அதன் மொழியாக்கத்தின்படி, இந்தியாவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டார். அவருக்கான உத்தரவுகள் சில ரஸ்யா உளவுத்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டது. இந்தியாவில் கிடைத்த சில வெளியக தொடர்புகள் மூலம் கொலை செய்யப்பட்டது என்று ரஸ்ய ஏடு குறிப்பிட்டுள்ள








திங்கள், 15 ஏப்ரல், 2013

Google Play Store இல் இருந்து அதிரடியாக 60000 அப்பிளிக்கேஷன்களை நீக்க முடிவு.



                                                                                     

 
பிரபல இணைய நிறுவனமான கூகுளானது அன்ரோயிட் இயங்குதளத்தினை உருவாக்கியிருந்தது.

அத்துடன் நின்றுவிடாது அவ் இயங்குளத்திற்கான பல வகையான அப்பிளக்கேஷன்களை வடிவமைத்ததுடன் அவற்றினை பயனர்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கென Google Play Store எனும் இணையத் தளத்தினையும் ஆரம்பித்திருந்தது.

எனினும் தற்போது இத்தளத்திலிருந்து சுமார் 60,000 வரையான அப்பிளிக்கேஷன்களை நீக்குவதற்கு அந்நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்திருக்கின்றது.

இதற்கு காரணம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகப்பட்டிருந்து இந்த அப்பிளிக்கேஷன்கள் மிகவும் குறைந்த தரத்துடன் காணப்படுகின்றமையே என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.









ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கொரியப் போர் மீண்டும் தொடங்குமா?



கொரிய தீபகற்பத்தை 60 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. எப்போது போர் வெடிக்குமோ? எத்தனை இலட்சம் பேர் அழிவார்களோ என்ற பேரச்சம் உலகைச் சூழ்ந்துள்ளது.




ஏனெனில் நடக்கப்போவது சாதாரண போராக அல்ல, அணு ஆயுதப் போர் என்பதனாலேயே இந்தப் பேரச்சம். எனவே, கொரியப் போர் தொடங்கினால் அது மூன்றாம் உலகப்போராக மாற்றமடையுமா? என்பதுதான் இன்றுள்ள ஊடகங்கள் பலவற்றின் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் அணு ஆயுதப் போராக மாற்றமடையும் என எச்சரிக்கப்படும் கொரியப் போர் கொரியக் குடாவிற்குள் மட்டும் முடிந்தவிடப்போவதில்லை. அது ஏனைய நாடுகளையும் பாதித்து அந்நாடுகளையும் போரில் குதிக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளலாம் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறான ஒரு போர் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதுதான் இராணுவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.



‘வட கொரியாவின் போர் மிரட்டல்கள் வெறும் வாய்ச் சவடால்களே என்றும் அவர்களின் செயற்பாடுகளே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்’ என்றும் அமெரிக்கா கருதுகின்றது. ஆனால், வெளியார் யாரும் நுழையமுடியாதவாறு இரும்புக் கோட்டையாகத் திகழும் வடகொரியாவின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை கண்டறிவது அவ்வளவு இலகுவானதல்ல. வட கொரியா களத்தில் இறங்கினாலேயே அதனை ஓரளவிற்கு கண்டறியமுடியும். அதனாலேயே வட கொரியா போர்க் களத்தில் இறங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் உண்டு.

வட கொரியா ஏன் இந்தளவு போர் வெறி கொண்டு நிற்கின்றது. தனது சகோதர்கள் வாழும் தென் கொரியாவை அழிக்கவேண்டும் என்ற அதன் சிந்தனைக்கு காரணமென்ன? இதனை அறிந்துகொள்வதற்கு கொரியாவின் வரலாற்றை கொஞ்சமேனும் அறிந்துகொள்வது நல்லது.

5000 ஆண்டு வரலாறு கொண்டதாகக் கூறப்படும் கொரிய வரலாற்றில், 1910ம் ஆண்டுக்குப் பின்னர்தான் உலகின் கவனத்தை கொரியா ஈர்த்தது. ஒரே தேசமாக இருந்த கொரியாவை ஜப்பான் கைப்பற்றியதில் இருந்துதான் அந்நாடு போர்களையும் சந்திக்கத் தொடங்கியது. அயல் நாடுகளை ஆக்கிரமிக்கவும் தன்னைப் பலவானாகக் காட்டுவதற்கும் ஜப்பான் எடுத்த பகீரதப் பிரயத்தனங்களால் வந்த வினை, இரண்டாம் உலகப் போரில் பாரிய வீழ்ச்சியையும், பேரழிவையும் சந்தித்து ஜப்பான். ஜப்பான் மீண்டும் நிமிர்ந்தெழ முடியாதளவிற்கு அமெரிக்கா கொடுத்தது இரு அணுகுண்டுத் தாக்குதல்.
1945ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது கொரியா ஜப்பானின் ஆளுகைக்குள் இருந்து விடுபட்டது. ஆனால், பேயிடம் இருந்து தப்பி பிசாசிடம் மாட்டிய கதையாக, ஜப்பானிடம் இருந்து விடுபட்ட கொரியாவை போரில் வெற்றி ஈட்டிய ‘நேச நாடுக’ளான அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.

ஒரே நாடு இரண்டு துண்டங்களாகின. வட பகுதியை சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கொம்யூனிஸ்ட் கட்சியினரும், தென் பகுதியை அமெரிக்க ஆதரவு பெற்ற முதலாளித்துவ ஆட்சியாளர்களும் கைப்பற்றி ஆட்சியமைத்தனர். ஆனால், வடகொரியா சும்மா இருக்கவில்லை. தென் பகுதியை மீட்டெடுத்து ஒரே தேசமாக்க பலமுறை முயன்றது. ஆனால் அது கைகூடவில்லை.

1950ல் தென்கொரியாவை முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் தாக்கியது வட கொரியா. தென்கொரியத் துருப்புகளால் ஈடுகொடுக்க முடியாமல் போன நிலையில், ஜப்பானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் விரைந்து வந்து தோள் கொடுத்தன. ஆனாலும் வட கொரியப் படையினரின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொள்ளமுடியவில்லை. வட கொரியப்படை தென் கொரியத் தலைநகர் வரை முன்னேறியிருந்தது.

நிலைமை கையை மீறிப்போய் தென் கொரியா முழுமையாக வடகொரியாவிடம் வீழ்ந்துவிட்டால் பின்னர் மீட்டெடுப்பது முடியாத காரியம் என்பதைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா. சபையையே புறக்கணித்தது. ஆனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பாதுகாப்பு சபையில் அப்போது மக்கள் குடியரசு சீனா அங்கம் பெற்றிருக்கவில்லை.

இதனால், அமெரிக்காவின் தீர்மானம் கடும் எதிர்ப்பின்றி நிறைவேறியது. 3 இலட்சம் பேரைக் கொண்ட ஐ.நா.வின் சர்வதேசப் படை உருவானது. பெயர்தான் சர்வதேசப் படை. ஆனால் அப்படையில் இருந்தவர்களில் 2.60 இலட்சம் பேர் அமெரிக்கர்கள். இந்தப் படை 1950 செப்டம்பரில் கொரியாவை அடைந்தது. அதன் தாக்குதலில் வடகொரியப் படை வேகமாய்ப் பின்வாங்கியது. சுமார் ஒரு மாதங்களுக்குள்ளாகவே பறிபோன தென்கொரியப் பகுதிகள் அனைத்தும் மீட்கப்பட்டன.

ஐ.நா.வின் படைகள் அத்துடன் நிற்கவில்லை. அமெரிக்காவின் ஆசையும் அத்துடன் அடங்கவில்லை. ஓடுகின்றவர்களைக் கண்டால் துரத்துகின்றவர்களுக்கு சந்தோசம் தானே. வடகொரியப் படையின் வேகமான பின்வாங்கலைப் பார்த்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹரி எஸ். டுருமென், ஐ.நா. படையினரை மேலும் முன்னேறப் பணித்தார். ஐ.நா. சர்வதேசப் படை வடகொரியாவுக்குள்ளும் புகுந்தது. வடகொரியாவுடன் அதன் நடவடிக்கை நின்றிருந்தால் பறவாயில்லை.

ஆனால் சீன - வடகொரிய எல்லையாக இருக்கும் யாலு ஆற்றின் கரைகளை நோக்கியும் படை முன்னேறியது. இந்த யாலு ஆறுதான் வட கொரியா - சீனாவின் 60 வீதத்திற்கும் அதிகமான எல்லையாக இருக்கின்றது. இந்த ஆற்றை நோக்கி ஐ.நா. படைகள் முன்னேறியது சீனாவிற்கு சீற்றத்தைக் கொடுத்தது. (வடகொரியாவை தனது நட்பு நடாக சீனா இன்று வரை வைத்திருக்க முனைந்தாலும், தன்னிச்சையான அதன் போர்கள்தான் சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. வட கொரியாவின் போர் தனது வாசல் வரை வருவதை சீனா விரும்புவதில்லை. இதனாலேயே வட கொரியாவை போரை முன்னெடுக்காமல் தடுக்க முயல்வதற்கும், அந்நாட்டை எதிர்க்க முயல்வதற்கும் காரணம். இதுபற்றிப் பின்னர் பார்ப்போம்)

ஐ.நா. படைகள் முன்னேறி வருவதை எதிர்கொள்ளத் தயராகின சீனத் தொண்டர் படை. இந்தப் போரில் சீனா களம் இறங்கும் என்று ஐ.நா.வோ அமெரிக்காவோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. விளைவு, கொரியப் போருக்குள் சீனாவும் நுழைந்தது. யாலு ஆற்றுடனான மலைப் பிரதேசங்களில் நின்று தாக்கிய சீனப் படைகளிடம், 1950ம் ஆண்டு டிசெம்பர் மாதம் கடும் குளிருக்கு மத்தியில் ஐ.நா. படையினரால் நின்று பிடிக்கமுடியவில்லை.

இழப்புக்கள் அதிகரிக்க அதகரிக்க ஐ.நா. படை பின்வாங்கத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் இழுபட்ட இந்தப் போரின் முடிவில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகக் கணிப்பிடப்பட்டது. 1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது. தென் கொரியாவில் நிரந்தரத் தளங்களை அமைத்துக்கொண்டது அமெரிக்கா.

இப்போது தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப் படைகள் மறுபுறமும் 240 கிலோ மீற்றர் நீளமுள்ள எல்லையை பாதுகாத்து வருகின்றன. ஆனால், அன்று தொட்டு இன்றுவரை போர்ப் பதட்டமே அந்த எல்லையில் இருந்து வருகின்றது. இந்நிலையில்தான், கடந்த மாத இறுதியில் தென் கொரியாவுடன் போர் தொடங்கி விட்டதாக வட கொரியா பிரகடனம் செய்தது. அத்துடன்,  தென்கொரிய அரசு மற்றும் இராணுவத்துடனான தொடர்பு இணைப்புக்களையும் துண்டித்துவிட்டது.

இதற்கும் மேலாகத் தங்கள் நாட்டைத் தற்காத்துக்கொள்ள அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரித்ததுதான் இன்று கொரிய தீபகற்பத்தை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதற்கு முழுமுதற் காரணம். இந்தப் போர் வெடிக்குமா?


நன்றி: ஈழமுரசு




வெள்ளி, 5 ஏப்ரல், 2013

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?








ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்
“காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார்

இளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.

ஞானி கேட்டார், “இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா?”

“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. பின்னால் அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை” என்றான் இளைஞன்

ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் “இதுதான் காதல்”

மேலும் இப்பொழுது இன்னொருபுறம் புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து "அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதே” என்றார்.

இம்முறையும் இளைஞன் அந்த பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.

“இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா?”மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.

“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.” ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.

“இதுதான் கல்யாணம்” என்றார் ஞானி புன்னகையுடன்.








வியாழன், 4 ஏப்ரல், 2013

அமெரிக்காவைத் தாக்க படைகளுக்கு வடகொரியா 'அனுமதி'


                                                                     


அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வட கொரியா தனது ராணுவப் படைகளுக்கு இறுதி அனுமதி தந்திருப்பதாகக் கூறுகிறது.

அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவான குவாமில் அமைந்திருக்கு அதன் தளத்தைச் சுற்றி, ஏவுகணைத் தற்பாதுகாப்பை பலப்படுத்தத் தொடங்கியதை அடுத்து இந்த அறிக்கை வருகிறது.
வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் ஒரு உண்மையான மற்றும் தெளிவான ஆபத்தைத் தோற்றுவிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.




அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நகர்வுகள் சிறிய அளவிலான, இலகுவான மற்றும் பல தரப்பட்ட அணு குண்டுத் தாக்குதல்களால் எதிர்கொள்ளப்படும் என்று வடகொரியாவின் ராணுவ தளபதிகள் கூறினர்.

குவாம் தீவிலிருந்தும், அமெரிக்க பிரதான நிலப்பரப்பிலிருந்தும் அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறப்பதை வட கொரியா கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

ஆனால் வட கொரியாவுக்கு அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் திறன் இல்லை என்றாலும், இந்த பிரதேசத்தில் அதன் இலக்குகளை, வடகொரியா தாக்க முடியும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.