சனி, 27 ஜூலை, 2013

தெரிந்து கொள்வோம்....



• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.

• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.

• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.

• மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.

• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.

• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.

• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.

• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்
கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.

• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப்
பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.

• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.

• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.

• மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.

• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.

• பெட்ரோலை "கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.

• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.

• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.

• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.

• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.

• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.

• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.

• "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

நன்றி..

பல தளங்களில் இருந்து திரட்டியது..,




ஞாயிறு, 21 ஜூலை, 2013

தொலைந்த உங்கள் மொபைல் போணை கண்டறிய சுலபமான வழி


                                                 



உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.



எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த திகதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

உங்களுடைய மொபைல் போன்னை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர் ஆகியவற்றை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.







திங்கள், 8 ஜூலை, 2013

2020 ஆம் ஆண்டில் உங்கள் நவீன வாழ்க்கை எப்படி இருக்கும் என கற்பனைக்காக செய்யப்பட்டுள்ள அசத்தல் காணொளி.



2020 ஆம் ஆண்டில் உங்கள் நவீன வாழ்க்கை எப்படி இருக்கும் என கற்பனைக்காக செய்யப்பட்டுள்ள காணொளி.

24 மணித்தியாலத்தில் மனிதர்களின் வாழ்கை முறையை வெளிப்படுத்தும் ஒரு கற்பனையான அசத்தல் காணொளி இது.








வெள்ளி, 5 ஜூலை, 2013

காதலிப்பது எப்படி ? இதோ சில TIPS



1) முதலில் உங்களிடம் இருக்கும் ஜீன்ஸ்களை அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் நல்லது). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.


4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.


10.நேரா ஒரு மியூசிக் ஷொப் போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற CD கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த CD பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு விஜய் இல்ல ஒரு அஜீத்தா உங்க‌ காதலிக்கு தெரிவீங்க அப்புறம் என்ன டூயட்டு தான் ஜாலி தான் ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் மக்கா... நான் சொன்ன கண்டிஷன ஃபாலோ பண்ணி உனக்கு ஒரு ஃபிகரு மாட்டினா அந்த ஃபிகர எப்பிடியாவது கள‌ட்டி விட்டுடு ஏன்னா இந்தமாதிரி ஃபிகருங்க‌ நல்ல குடும்பத்துக்கு ஒத்து வராது அம்புட்டு தான் நான் சொல்லுவேன் ஆமா ஹீஹீஹீ






திங்கள், 1 ஜூலை, 2013

இனி நீங்கள் எதையும் தொலைக்க மாட்டீர்கள் !!!





இனி நீங்கள் கிரெடிட் காட் வாலட், பேர்ஸ், கை‍பை மற்றும் திறப்பு போன்ற பொருட்களை தொலைத்து விட்டால் அதை தேடி அலையத்தேவையில்லை. காரணம் வந்து விட்டது "டைல்" ! இது ஒரு சிறிய பிளாஸ்டிக் ஆகும். மிகவும் மெல்லிய மற்றும் சிறிய ரக பெட்டி வடிவில் இது அமைந்துள்ளது. இதில் சுமார் பல வருடங்களுக்கு இயக்கக்கூடிய பேட்டரிகள் உள்ளது. மற்றும் புளூ -ரூத் அலைகளை அது வெளியிடக் கூடியது. இந்த "டைல்" என்னும் பிளாஸ்டிக் துண்டை உங்கள் திறப்பு இல்லையென்றால் கை-பை அல்லது சைக்கிள் எதிலாவது நீங்கள் போட்டு விடலாம். பின்னர் அதனைக் காணவில்லை என்றால், இல்லை மறந்து எங்காவது விட்டிருந்தால், அதனைக் கண்டு பிடிப்பது ரெம்ப ஈசி.

உங்கள் ஸ்மாட் போனில் ஒரு அப்பிளிக்கேஷனை டவுன்லோட் செய்தால் போதும், உங்கள் மொபைல் போன் திரையில், நீங்கள் தொலைத்த பொருள் எங்கே இருக்கிறது ? எத்தனை அடி தூரத்தில் இருக்கிறது என்பதனைக் காணலாம்.

சுமார் 150 அடி தூரம் வரைக்கும் இது வேலைசெய்யும்.

குறிப்பாக சிறுவர்கள்(உங்கள் பிள்ளைகளின்) காற்சட்டை பாக்கெட்டில் கூட நீங்கள் இதனைப் போட்டு விடலாம். நீங்கள் சன நடமாட்டம் அதிகம் உள்ள இடம் சென்றால் கூட , உங்கள் பிள்ளைகள் அருகில் தான் இருக்கிறார்களா என்று உங்களால் கண்காணிக்க முடியும். இதில் பிரத்தியேகமான விடையம் ஒன்றும் உள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு சைக்கிள் அல்லது லாப்-டொப்பின் பாக்கில் இதனை இணைத்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளும்வோம்.

ஆனால் உங்கள் லாப் -டொப்பை யாரோ களவாடிவிட்டார்கள். அவர்கள் 150 அடி தூரத்துக்கு மேல் போய் விட்டால் கூட உங்கள் மோபைல் போனில் உள்ள அப்பிளிகேஷன் அதனை தொடர்ந்து தேடியவண்ணமே இருக்கும். தற்செயலாக நீங்கள் திருடிய நபருக்கு அருகில் 2 நாட்கள் கழித்துச் சென்றாலும் உங்கள் மோபைல் போன் அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்.

மிகவும் குறைந்த விலையில் சந்தைக்கு வரவிருக்கும் "டைல்" சாதனத்தை பல மில்லியன் கணக்கான மக்கள் வாங்கிப் பாவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரத்தியேகமான விடையம் என்னவென்றால், 150 அடி தூரம் வரை இது வேலைசெய்வதும், மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட பற்றரிகளும் தான்.