வெள்ளி, 11 ஜூலை, 2014

பிளாஸ்டிக் அரிசி.. சீனர்களின் அடுத்த டூப்ளிகேட் !



                                           


பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....!

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள்,

மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கரன்சி வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.

இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும்
போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க
காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.

கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..!

விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..!

இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!
மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!

இதைகண்டுபிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து
வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்திரிக்கை.



வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பிரித்தானிய‌ மெட்றோ பொலிடன் பொலிசார் (Metro politan police) தமிழீழ‌ தேசிய கொடியை அங்கிகரித்துள்ளார்கள் !



பிரித்தானியா உட்பட பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடைசெய்தார்கள். அவர்கள் கொடியை ஒத்த தமிழீழ தேசிய கொடியை புலிகளின் கொடி என்று கூறிவந்தனர்.

 பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் மக்கள் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) இதனை சாதித்து முடித்துள்ளார்கள். அவர்கள் கடினமாக பாடுபட்டு, ஆதாரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் காட்டி, பல ஆவணங்களை தயாரித்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார்கள்.


இதனால் தற்போது தமிழ் மொழிக்கு, ஒரு இலச்சினை கிடைத்துள்ளது மற்றும் அவர்களுக்கு என்று ஒரு கொடி உள்ளது என்பதனை பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது.

                                                 
தமிழர்களின் தேசிய கொடியை பிரித்தானியப் பொலிசார் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே இனி வரும் காலங்களில் அதனைப் பிடிக்க பிரித்தானியாவில் தடை எதுவும் கிடையாது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் , 

புலிக்கொடியை அன் நாட்டின் தமிழ் இலச்சினையாக மாற்ற எல்லா நாட்டு தமிழர்களும் முயற்சி எடுக்கவேண்டும். தமிழர்களுக்கு தற்போது கொடி அங்கிகாரம் கிடைத்துள்ளது
.

மெட்றோ பொலிடன் பொலிசாரின் இணையத்தை பார்க்க இங்கே அழுத்தவும் http://www.met.police.uk/contact_points/








திங்கள், 12 ஆகஸ்ட், 2013

உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமா ?? 12 ராசிக்கும் ஜோதிட பார்வை !! இந்த ஆய்வு நான் படித்ததில் பிடித்தது மட்டுமே... ஹீஹீஹீ


உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்

                                                             



மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.



                                                                                                            நன்றி tamilriver.net







ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பருந்து மனிதனுக்கு தரும் பாடம்.


                           


ஒரு பருந்துக்கு ஆயுட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. 

அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். 

அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். 

அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்.

வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்கை.





வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ் !!!







தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.


சிந்தியுங்கள்........தமிழர்களே......" 



                                                                        நன்றி தமிழால் இணைவோம் பேஸ்புக் தளம்.



சனி, 27 ஜூலை, 2013

தெரிந்து கொள்வோம்....



• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.

• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.

• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.

• மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.

• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.

• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.

• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.

• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்
கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.

• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப்
பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.

• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.

• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.

• மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.

• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.

• பெட்ரோலை "கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.

• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.

• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.

• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.

• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.

• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.

• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.

• "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

நன்றி..

பல தளங்களில் இருந்து திரட்டியது..,




ஞாயிறு, 21 ஜூலை, 2013

தொலைந்த உங்கள் மொபைல் போணை கண்டறிய சுலபமான வழி


                                                 



உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.



எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த திகதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

உங்களுடைய மொபைல் போன்னை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர் ஆகியவற்றை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.