பிரித்தானியா உட்பட பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடைசெய்தார்கள். அவர்கள் கொடியை ஒத்த தமிழீழ தேசிய கொடியை புலிகளின் கொடி என்று கூறிவந்தனர்.
பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் மக்கள் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) இதனை சாதித்து முடித்துள்ளார்கள். அவர்கள் கடினமாக பாடுபட்டு, ஆதாரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் காட்டி, பல ஆவணங்களை தயாரித்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார்கள்.
இதனால் தற்போது தமிழ் மொழிக்கு, ஒரு இலச்சினை கிடைத்துள்ளது மற்றும் அவர்களுக்கு என்று ஒரு கொடி உள்ளது என்பதனை பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழர்களின் தேசிய கொடியை பிரித்தானியப் பொலிசார் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே இனி வரும் காலங்களில் அதனைப் பிடிக்க பிரித்தானியாவில் தடை எதுவும் கிடையாது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ,
புலிக்கொடியை அன் நாட்டின் தமிழ் இலச்சினையாக மாற்ற எல்லா நாட்டு தமிழர்களும் முயற்சி எடுக்கவேண்டும். தமிழர்களுக்கு தற்போது கொடி அங்கிகாரம் கிடைத்துள்ளது.
மெட்றோ பொலிடன் பொலிசாரின் இணையத்தை பார்க்க இங்கே அழுத்தவும் http://www.met.police.uk/contact_points/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக