திங்கள், 25 மார்ச், 2013

பெண்கள் இல்லாத உலகம் எப்பிடி இருக்கும் ??






பார்க், பீச் எல்லாம் Emptya இருக்கும்.

போலீஸ் எல்லாம் ரெஸ்ட்ல இருந்து இருப்பாங்க.

மொபைல் கொம்பனி எல்லாம் Loss ல இருக்கும்.

SMS, Missed Calls கருமாந்திரம் எல்லாம் இருக்காது.

Greeting card, Gift shop, Perfume இந்த கன்றாவி எல்லாம் இருக்காது.

College பசங்களுக்கு Arrear இருக்காது.

அப்பா , மகன் உறவு ஒற்றுமையா இருந்து இருக்கும்

மொத்தத்தில பசங்க உருப்படியா இருந்து இருப்பாங்க.. :p




அது சரி இந்த தலைப்புக்கு எதுக்குடா லைலா 

போட்டவ போட்டு இருக்கேனு கேக்குறீங்களா ?? 

அது ஏன்னா....



எனக்கு லைலாவ ரொம்ப பிடிக்கும் அதனால தான்


வேற ஒன்னுமில்லப்பா  :)








சனி, 23 மார்ச், 2013

நடிகர் கமலஹாசன் மாணவர் போராட்டம் பற்றிய கருத்து. (வீடியோ இணைப்பு)


விஜய் டி.வி யின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்காக பங்கு பெற்ற திரு நடிகர் கமலஹாசன் அவர்களிடம் நிருபர்கள் இலங்கைக்கு எதிராக தமிழ் மாணவர்கள் நடத்தும் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பினர் அதர்க்கு திரு கமலஹாசன் அளித்த பதில் காணொளி.













செவ்வாய், 12 மார்ச், 2013

பதுங்கு குழிக்குள் சந்தித்துக்கொண்ட அஜித் ‍ சூர்யா !!



வணக்கம் நன்பர்களே...

இன்னைக்கு உங்களுக்கு ஒரு பழைய புக்ல நான் வாசிச்சு ரசிச்ச ஒரு கற்பனை கதை அதாவது அஜித் & சூர்யா ரெண்டு பேரும் தலைமறைவா இருக்கிறப்பொ திடீர்னு சந்திச்சுக்குறாங்க வேற வேற கெட்டப்புல... இந்த கதைய கற்பனையா ரசிக்கிற மாதிரி எழுதி இருக்கார் மு. கஜேந்திரன் அவருக்கு வாழ்த்துக்கள்.

வாசிச்சு நீங்களும் சிரிங்க மக்கா.



                                                 


                                       

பிடிச்சிருந்தா கமண்ட் பண்ணூங்க ஏனா என்னும் கொஞ்சம் ஸ்டோக் இருக்கு அப்புறமா போஸ்ட் பண்றேன் ;)






ஞாயிறு, 10 மார்ச், 2013

பேஸ்புக் ஃபிகரால லூசானேன்... இது உங்களோட வாழ்க்கையிலையும் நடந்து இருக்கலாம்




பேஸ்புக்கில் நம்மாளுங்க பண்ற வேலைய பாட்டா படிச்சு இருக்காங்க பாத்துட்டு நீங்களும் ட்ரை பண்ணாதீங்க அப்புறம் இதே கதி தான் உங்களுக்கும் நன்பர்களே...



   





யானை கழிவிலிருந்து ‘ஸ்பெஷல் காபி’: ஒரு கப் 30 யூரோ




ஒரு கப் 30 யூரோவுக்கு விற்கப்படும் காபியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அதென்ன ஸ்பெஷல் காபி? 

யானையின் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் காபி தான் அது.

பிளாக் ஐவரி என்ற இந்த காபியை தாய்லாந்தில் தயாரிக்கின்றனர். 

தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் இந்நாட்டுடன் லாவோஸ், 

மியான்மர் நாட்டு எல்லைகள் சந்திக்கும் இடம் கோல்டன் டிரையாங்கிள்.

 மலைப்பாங்கான பகுதி மூலிகைளுக்கு பிரசித்தி பெற்ற இடம்.

இங்கு இத்தகைய காபி தயாரிப்பதற்காக தனியாக யானைகள் வளர்க்கப்படுகின்றன. 

அவற்றுக்கு புல், வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றுடன் காபி கொட்டைகளையும் உண்ணக் கொடுக்கின்றனர்.

அந்த காபி கொட்டைகள் யானையின் வயிற்றில் 15 முதல் 30 மணி நேரம் வரை ஜீரணமாகிறது. அப்போது உணவு நொதித்தல் காரணமாக அந்த கொட்டைகளில் சுவை கூடுகிறது.

பின்னர், யானை சாணியில் செரிக்காமல் வெளியேறியிருக்கும் காபி கொட்டைகள் சேகரிக்கப்படுகி ன்றன. 

33 கிலோ கொட்டைகளை யானை உண்டால் ஒரு கிலோ காபி கொட்டை மட்டுமே கிடைக்கும்.

இவ்வளவு குறைவாக காபி கொட்டைகள் கிடை ப்பதால் அதன் விலை மிக அதிகமாகிறது. 

இந்த கொட்டைகளை வறுத்து, அரைத்து தயாராவது தான் பிளாக் ஐவரி காபி.

இதன் விலை கிலோ 685 யூரோவாகும். இந்த காபி வடக்கு தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் அபுதாபியில் உள்ள நட்சத்திர உணவகங்களில் 1 கப் 30 யூரோவாகும்.
















சனி, 9 மார்ச், 2013

இல்லவே '' இல்லாத'' நாடுகள் பற்றிய சில சுவையான தகவல்கள்







1) ''திரையரங்குகள் '' இலாத நாடு ‍‍‍ பூட்டான்

2) ''தினசரி பத்திரிகைகள்'' இல்லாத நாடு ‍ கம்பியா

3) ''காகங்கள்'' இல்லாத நாடு நியூசீலாந்து

4) ''ரயில்'' இல்லாத நாடு ஆப்கானிஸ்தான்

5) ''பாம்புகள்'' இல்லாத நாடு அயர்லாந்து

6) தனக்கென ''உத்தியோகபூர்வ தலைனகரம்'' இல்லாத நாடு நவ்ரு

7) ''பொதுக்கழிப்பறைகள்'' இல்லாத நாடு பெரு

8) தனக்கென ''தாய்மொழி'' இல்லாத நாடு சுவிட்சர்லாந்து

9) ''வாடகைக்கார்கள்'' இல்லாத நாடு பெர்முட‌

10) ''தனக்கென்று ராணுவம்'' வைத்துக்கொள்ளாத நாடு நோர்வே




தனி ஈழத்தை ஆதரிக்கும் சிங்கள கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன.


                                         


பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன.

இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்ததால், ராஜபக்ச அரசு இவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது. உயிருக்குப் பயந்து இலங்கையைவிட்டு வெளியேறிவிட்டார்.


இவர் பிறப்பால் ஒரு சிங்களவர். ஆனால், அந்த இனவாதத்துக்கு எதிராய், சரியாய் குரல் கொடுப்பவர். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


கேள்வி: ராஜபக்ச சொல்வதைப்போல இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் ஒற்றுமையாக வாழமுடியுமா?


பதில்: வாய்ப்பே இல்லை. சிங்கள அரசு காலம் காலமாகத் தமிழர்களை ஏமாற்றி வருகிறது. இறுதி யுத்தத்தில் மட்டும் 40,000 பேரைக் கொன்று குவித்துவிட்டு, நல்லிணக்கம் உருவாகவேண்டும் என எப்படி எதிர்பார்க்கலாம்?


நான் ஒரு மார்க்சிஸ்ட். உலகின் எந்த நாட்டில் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் நடந்தாலும், நான் அதை ஆதரிப்பேன். சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிக்கிறேன்.


இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகள், தமிழர்கள் காலம் காலமாக வாழும் பகுதி. அதைத் தனி நாடாக்க வேண்டும் என அவர்கள் விரும்பினால், அதை ஆதரிக்கவேண்டும். அது அவர்களின் உரிமை. அதை ஆதரிக்க வேண்டியது என் கடமை.


கேள்வி: இப்படிப் பேசுவதால்தான் இலங்கையைவிட்டு நீங்கள் வெளியேறினீர்களா?

பதில்: 2009 ஜனவரி, இலங்கைப் பத்திரிகையாளர்களுக்கு கொடுமையான மாதம். அதை ‘பிளாக் ஜனவரி’ என்றுகூட குறிப்பிடுவோம். ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, மகிந்த அரசாங்கத்தால் கொல்லப்பட்டதும் அந்த மாதத்தில்தான்.

எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நான் அந்த சமயத்தில் இலங்கையைவிட்டு வெளியேறினேன். தென் இலங்கை சிங்களப் பத்திரிகையாளர்களான நாங்கள், ஒரு குழுவாக தமிழர் உரிமை, தமிழர் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போராடினோம்.


எமக்கு மகிந்த அரசால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. வேறு வழி தெரியாமலேயே பலரும் அப்போது இலங்கையில் இருந்து வெளியேறினோம்.


கேள்வி: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட படம், பலத்த அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறதே?


பதில்: ராஜபக்ச அரசின் உண்மை முகத்தை சர்வதேசம் இப்போதுதான் மெதுவாக அறிந்து கொள்கிறது. அந்தப் பையனைப் பாருங்கள். அள்ளிக் கொஞ்சலாம்போல இருக்கிறது. அவன் முகத்தைப் பாருங்கள். சாப்பிட்டபடி, வேறு எதையோ சிந்திக்கிறான்.


பாலச்சந்திரன் கொலை, சர்வதேசத்தை உசுப்பி இருக்கிறது. சர்வதேசத்தை உசுப்ப சிறு குழந்தைகளின் மரணங்கள் தேவை எனும் ஒரு கொடிய உலகில் நாம் வாழ்கிறோம். உலகத்தின் மனசாட்சி முன்னால் இலங்கை தலைகுனிந்து நிற்கிறது.


கேள்வி: இலங்கைத் தமிழர்களின் வலியை நீங்கள் உணர்வது மாதிரி மற்ற சிங்களர்கள் உணர்கிறார்களா?


பதில்: இலங்கை அரசாங்கம் மக்களுக்கானது அல்ல. அது மகிந்த குடும்பத்துக்கானது. குடும்ப ஆட்சியை நிலைநாட்ட மகிந்த அரசு தமிழர்களைக் கொல்லும் என்பதை அறிந்து, உணர்ந்து இறுதிப் போர் தொடங்கியதில் இருந்தே எனது பேனாவால் தமிழர்களுக்காகப் போராடினேன்.


நாங்கள் அப்போது கையறு நிலையில் இருந்தோம். எம்மால் எதுவுமே செய்ய முடியவில்லை. சிங்கள பொதுஜனத்துக்கு தமிழ் மக்கள் மீதான வெறுப்பை சிங்கள அரசாங்கங்கள் காலம் காலமாக ஊட்டி வருகின்றன.


சிங்கள மக்கள் தமிழர்களின் வலியை உணர்ந்தால், அது சிங்கள அரசாங்கத்துக்கு பெரிய தோல்வி. ஆகவே, ‘தமிழர்கள் உங்களின் எதிரிகள்’ எனும் கருத்தியலை அந்த அரசாங்கம் சிங்கள மக்களிடையே விதைத்து வருகிறது.


இலங்கையில் உள்ள தமிழர்கள் என்னுடைய சகோதரர்கள்’ என்று ராஜபக்ச சொல்கிறார். 40,000 சகோதரர்களைக் கொல்ல அவருக்கு எப்படி மனம் வந்தது? தமிழர்களுக்கு வேண்டியது அலங்கார வார்த்தைகள் இல்லை. நிஜமான அன்பு. அது, ராஜபக்சவிடம் எந்தக் காலத்திலும் கிடைக்காது.


கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு சர்வதேசம் நீதி பெற்றுத்தரும் என நம்புகிறீர்களா?

பதில்: எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. இப்போது போர்க்குற்றம் பேசும் சர்வதேசம் போர் நடந்த தருணத்தில் எங்கே போனது?

அமெரிக்கா… இலங்கையை எதிர்த்தால், அதில் அமெரிக்க நலன் இருக்கிறது.

இப்போது போர்க்குற்றம் பேசும் நாடுகள் எல்லாம் தமது நலனுக்காகவே அதைப் பேசுகின்றன. அவர்களிடம் உண்மையான அக்கறை இல்லை.

அவர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நாடகம் ஆடினார்கள். ஆடுகிறார்கள். இனியும் ஆடுவார்கள்.


-நன்றி ஜூனியர் விகடன்

ஞாயிறு, 3 மார்ச், 2013

லாறி விபத்தில் உயிர் தப்பிய அதிர்ஸ்ட பெண்

                                 லாறி விபத்தில் உயிர் தப்பிய அதிர்ஸ்ட பெண்