ஞாயிறு, 10 மார்ச், 2013

யானை கழிவிலிருந்து ‘ஸ்பெஷல் காபி’: ஒரு கப் 30 யூரோ




ஒரு கப் 30 யூரோவுக்கு விற்கப்படும் காபியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அதென்ன ஸ்பெஷல் காபி? 

யானையின் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் காபி தான் அது.

பிளாக் ஐவரி என்ற இந்த காபியை தாய்லாந்தில் தயாரிக்கின்றனர். 

தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் இந்நாட்டுடன் லாவோஸ், 

மியான்மர் நாட்டு எல்லைகள் சந்திக்கும் இடம் கோல்டன் டிரையாங்கிள்.

 மலைப்பாங்கான பகுதி மூலிகைளுக்கு பிரசித்தி பெற்ற இடம்.

இங்கு இத்தகைய காபி தயாரிப்பதற்காக தனியாக யானைகள் வளர்க்கப்படுகின்றன. 

அவற்றுக்கு புல், வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றுடன் காபி கொட்டைகளையும் உண்ணக் கொடுக்கின்றனர்.

அந்த காபி கொட்டைகள் யானையின் வயிற்றில் 15 முதல் 30 மணி நேரம் வரை ஜீரணமாகிறது. அப்போது உணவு நொதித்தல் காரணமாக அந்த கொட்டைகளில் சுவை கூடுகிறது.

பின்னர், யானை சாணியில் செரிக்காமல் வெளியேறியிருக்கும் காபி கொட்டைகள் சேகரிக்கப்படுகி ன்றன. 

33 கிலோ கொட்டைகளை யானை உண்டால் ஒரு கிலோ காபி கொட்டை மட்டுமே கிடைக்கும்.

இவ்வளவு குறைவாக காபி கொட்டைகள் கிடை ப்பதால் அதன் விலை மிக அதிகமாகிறது. 

இந்த கொட்டைகளை வறுத்து, அரைத்து தயாராவது தான் பிளாக் ஐவரி காபி.

இதன் விலை கிலோ 685 யூரோவாகும். இந்த காபி வடக்கு தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் அபுதாபியில் உள்ள நட்சத்திர உணவகங்களில் 1 கப் 30 யூரோவாகும்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக