வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பிரித்தானிய‌ மெட்றோ பொலிடன் பொலிசார் (Metro politan police) தமிழீழ‌ தேசிய கொடியை அங்கிகரித்துள்ளார்கள் !



பிரித்தானியா உட்பட பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடைசெய்தார்கள். அவர்கள் கொடியை ஒத்த தமிழீழ தேசிய கொடியை புலிகளின் கொடி என்று கூறிவந்தனர்.

 பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் மக்கள் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) இதனை சாதித்து முடித்துள்ளார்கள். அவர்கள் கடினமாக பாடுபட்டு, ஆதாரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் காட்டி, பல ஆவணங்களை தயாரித்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார்கள்.


இதனால் தற்போது தமிழ் மொழிக்கு, ஒரு இலச்சினை கிடைத்துள்ளது மற்றும் அவர்களுக்கு என்று ஒரு கொடி உள்ளது என்பதனை பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது.

                                                 
தமிழர்களின் தேசிய கொடியை பிரித்தானியப் பொலிசார் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே இனி வரும் காலங்களில் அதனைப் பிடிக்க பிரித்தானியாவில் தடை எதுவும் கிடையாது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் , 

புலிக்கொடியை அன் நாட்டின் தமிழ் இலச்சினையாக மாற்ற எல்லா நாட்டு தமிழர்களும் முயற்சி எடுக்கவேண்டும். தமிழர்களுக்கு தற்போது கொடி அங்கிகாரம் கிடைத்துள்ளது
.

மெட்றோ பொலிடன் பொலிசாரின் இணையத்தை பார்க்க இங்கே அழுத்தவும் http://www.met.police.uk/contact_points/








திங்கள், 12 ஆகஸ்ட், 2013

உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமா ?? 12 ராசிக்கும் ஜோதிட பார்வை !! இந்த ஆய்வு நான் படித்ததில் பிடித்தது மட்டுமே... ஹீஹீஹீ


உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்

                                                             



மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.



                                                                                                            நன்றி tamilriver.net







ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பருந்து மனிதனுக்கு தரும் பாடம்.


                           


ஒரு பருந்துக்கு ஆயுட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. 

அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். 

அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். 

அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்.

வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்கை.





வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ் !!!







தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.


சிந்தியுங்கள்........தமிழர்களே......" 



                                                                        நன்றி தமிழால் இணைவோம் பேஸ்புக் தளம்.



சனி, 27 ஜூலை, 2013

தெரிந்து கொள்வோம்....



• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.

• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.

• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.

• மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.

• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.

• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.

• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.

• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்
கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.

• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப்
பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.

• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.

• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.

• மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.

• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.

• பெட்ரோலை "கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.

• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.

• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.

• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.

• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.

• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.

• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.

• "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

நன்றி..

பல தளங்களில் இருந்து திரட்டியது..,




ஞாயிறு, 21 ஜூலை, 2013

தொலைந்த உங்கள் மொபைல் போணை கண்டறிய சுலபமான வழி


                                                 



உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.



எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த திகதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

உங்களுடைய மொபைல் போன்னை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர் ஆகியவற்றை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்.







திங்கள், 8 ஜூலை, 2013

2020 ஆம் ஆண்டில் உங்கள் நவீன வாழ்க்கை எப்படி இருக்கும் என கற்பனைக்காக செய்யப்பட்டுள்ள அசத்தல் காணொளி.



2020 ஆம் ஆண்டில் உங்கள் நவீன வாழ்க்கை எப்படி இருக்கும் என கற்பனைக்காக செய்யப்பட்டுள்ள காணொளி.

24 மணித்தியாலத்தில் மனிதர்களின் வாழ்கை முறையை வெளிப்படுத்தும் ஒரு கற்பனையான அசத்தல் காணொளி இது.








வெள்ளி, 5 ஜூலை, 2013

காதலிப்பது எப்படி ? இதோ சில TIPS



1) முதலில் உங்களிடம் இருக்கும் ஜீன்ஸ்களை அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் நல்லது). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.


4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.


10.நேரா ஒரு மியூசிக் ஷொப் போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற CD கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த CD பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு விஜய் இல்ல ஒரு அஜீத்தா உங்க‌ காதலிக்கு தெரிவீங்க அப்புறம் என்ன டூயட்டு தான் ஜாலி தான் ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் மக்கா... நான் சொன்ன கண்டிஷன ஃபாலோ பண்ணி உனக்கு ஒரு ஃபிகரு மாட்டினா அந்த ஃபிகர எப்பிடியாவது கள‌ட்டி விட்டுடு ஏன்னா இந்தமாதிரி ஃபிகருங்க‌ நல்ல குடும்பத்துக்கு ஒத்து வராது அம்புட்டு தான் நான் சொல்லுவேன் ஆமா ஹீஹீஹீ






திங்கள், 1 ஜூலை, 2013

இனி நீங்கள் எதையும் தொலைக்க மாட்டீர்கள் !!!





இனி நீங்கள் கிரெடிட் காட் வாலட், பேர்ஸ், கை‍பை மற்றும் திறப்பு போன்ற பொருட்களை தொலைத்து விட்டால் அதை தேடி அலையத்தேவையில்லை. காரணம் வந்து விட்டது "டைல்" ! இது ஒரு சிறிய பிளாஸ்டிக் ஆகும். மிகவும் மெல்லிய மற்றும் சிறிய ரக பெட்டி வடிவில் இது அமைந்துள்ளது. இதில் சுமார் பல வருடங்களுக்கு இயக்கக்கூடிய பேட்டரிகள் உள்ளது. மற்றும் புளூ -ரூத் அலைகளை அது வெளியிடக் கூடியது. இந்த "டைல்" என்னும் பிளாஸ்டிக் துண்டை உங்கள் திறப்பு இல்லையென்றால் கை-பை அல்லது சைக்கிள் எதிலாவது நீங்கள் போட்டு விடலாம். பின்னர் அதனைக் காணவில்லை என்றால், இல்லை மறந்து எங்காவது விட்டிருந்தால், அதனைக் கண்டு பிடிப்பது ரெம்ப ஈசி.

உங்கள் ஸ்மாட் போனில் ஒரு அப்பிளிக்கேஷனை டவுன்லோட் செய்தால் போதும், உங்கள் மொபைல் போன் திரையில், நீங்கள் தொலைத்த பொருள் எங்கே இருக்கிறது ? எத்தனை அடி தூரத்தில் இருக்கிறது என்பதனைக் காணலாம்.

சுமார் 150 அடி தூரம் வரைக்கும் இது வேலைசெய்யும்.

குறிப்பாக சிறுவர்கள்(உங்கள் பிள்ளைகளின்) காற்சட்டை பாக்கெட்டில் கூட நீங்கள் இதனைப் போட்டு விடலாம். நீங்கள் சன நடமாட்டம் அதிகம் உள்ள இடம் சென்றால் கூட , உங்கள் பிள்ளைகள் அருகில் தான் இருக்கிறார்களா என்று உங்களால் கண்காணிக்க முடியும். இதில் பிரத்தியேகமான விடையம் ஒன்றும் உள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு சைக்கிள் அல்லது லாப்-டொப்பின் பாக்கில் இதனை இணைத்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளும்வோம்.

ஆனால் உங்கள் லாப் -டொப்பை யாரோ களவாடிவிட்டார்கள். அவர்கள் 150 அடி தூரத்துக்கு மேல் போய் விட்டால் கூட உங்கள் மோபைல் போனில் உள்ள அப்பிளிகேஷன் அதனை தொடர்ந்து தேடியவண்ணமே இருக்கும். தற்செயலாக நீங்கள் திருடிய நபருக்கு அருகில் 2 நாட்கள் கழித்துச் சென்றாலும் உங்கள் மோபைல் போன் அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்.

மிகவும் குறைந்த விலையில் சந்தைக்கு வரவிருக்கும் "டைல்" சாதனத்தை பல மில்லியன் கணக்கான மக்கள் வாங்கிப் பாவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரத்தியேகமான விடையம் என்னவென்றால், 150 அடி தூரம் வரை இது வேலைசெய்வதும், மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட பற்றரிகளும் தான்.

                                                               





                                                              

வியாழன், 27 ஜூன், 2013

ஆப்பிள் ஐபோன் தொலைபேசிக்கான புதிய பதிப்பு IOS 7 மற்றும் IOS 6.1.3 ஒரு ஒப்பீடு




ஐபோன் கைத்தொலைபேசிக்களுக்கான புதிய பதிப்பான IOS 7 வெளி வர இருக்கும் நேரத்தில IOS 6.1.3 மற்றும் IOS 7 இரண்டுக்கும் ஒரு ஒப்பீடு புகைப்படமாக..


Lock screen

LS With audio player
  
Home 

Call

Weather

Notes

Settings

Camera

Safari 
Search

Double click







அறிமுகமாகின்றது Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன்


                                                       


இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கிவந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியதான பதிப்பை அறிமுகப்படுத்துகின்றது.

இம்மாதம் வெளியிடப்படவுள்ள Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் மொபைல் சாதனங்களிலிருந்து டெக்ஸ்டாப் கணனிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடியதாகவும் ஒரே கணக்கினை டெக்ஸ்டாப், மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு சாதனத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியினை மற்றைய சாதனத்தில் படிக்கக்கூடியதாகவும், ஒரு சாதனத்தில் குறுஞ்செய்தி அழிக்கப்படும்போது மற்றைய சாதனத்திலிருந்தும் அழிந்துபோகக்கூடிய வகையிலும் இப்புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.


                                                        



         

ஞாயிறு, 23 ஜூன், 2013

நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றது என்பது ஒரு கட்டுக்கதை என ஹாலிவூட் திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் இன் மனைவி வெளியிட்டிருக்கிறார்.


கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பி வைத்தது.

ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு "நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகி விட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.

அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.

"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.

அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.


நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?

அன்றைக்கு - அதுவும் 60 - களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.





வியாழன், 13 ஜூன், 2013

மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் காற்சட்டை கண்டுபிடிப்பு.







இனி பற்றறிகளைச் சார்ஜ் செய்ய நீங்கள் இடம் தேடி அலையத்தேவையே இல்லை. பிற்பாக்கெட்டில் போட்டால் போதும் சார்ஜ் செய்துகொள்ளலாம். 

லண்டனில் உள்ள சவுத்ஹம்டன் பல்கலைக் கழகமும் வோடாபோனும் இணைந்தே இந்தனைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

நாம் அணியும் கால்சட்டையாக இருக்கலாம் இல்லை என்றால் ஜீன்சாக இருக்கலாம். 

ஆனால் நாம் நடக்கும்வேளை பின் புறத்தில் (அடிப்பகுதியில்) உராய்வு ஏற்படுவது வழக்கம். 

இதனை தான் விஞ்ஞானிகள் டெக்னிக்காகப் பாவித்துள்ளார்கள்.


உராய்வு ஏற்படும் பகுதியில் இவர்கள் ஒருவகையான நார் இழைகளை இணைத்துள்ளார்கள். 

உராய்வினால் ஏற்படும் வெப்பம் மற்றும் அதன் உராய்வை இந்த நார் இழை மின்சாரமாக மாற்றுகிறது.

எனவே நீங்கள் நடந்தால் மற்றும் உங்கள் உடல் உஷ்ணமாக இருந்தால் போதும் உடனே காற்சட்டை மின்சாரத்தை தயாரிக்க ஆரம்பித்துவிடும். 

பின்னர் என்ன அதில் ஒரு வயரைப் பொருத்தி மோபைல் போனுக்கு கொடுத்தால் போதும், அது சார்ஜ் செய்யப் பயன்படும். 

ஐபேட், ஐபொட், வாக்மென், மோபைல் போன் என பல சாதங்களை இனி சார்ஜ் செய்வது சுலபமாகிறது. ஆக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று தான். இக் கால்சட்டையை அணியவேண்டியது தான். 

இல்லை என்றால் அவர்கள் தரும் ஒரு விதமான நார் இழைகளை உங்கள் கால்சட்டையில் பொருத்தவேண்டும்.

இதற்கு பவர் பாக்கெட் என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.




ஞாயிறு, 19 மே, 2013

வருங்காலத்தில சூப்பர் ஸ்டாருக்கே சவாலா வருவான் போல இந்தப்பையன் (கலக்கல் வீடியோ இணைப்பு)



மகா ஜனங்களே இந்த பய புள்ளயோட லொல்லு தாங்க முடியலங்க நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க இவன் பண்ணுற அட்டூழியத்த.

இவன் வயசு 2 தானாமுங்க ஆனா நம்ம சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஸ்டைல பாருங்க.


















சனி, 18 மே, 2013

மாயன் காலன்டரின் இரண்டாவது பகுதி தென்னமெரிக்காவில் கண்டுபிடிப்பு





உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது.

ஆனால் இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த பகுதி தொன்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு எடுக்கப்பட்டது.

பழைய கலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான் சரியான காரணம் கிடைத்துள்ளது.

இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் தேதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம்.

 இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதே நேரத்தில் சூரியன் வியாழன் போன்றவையும் பூமியுடன் நேர் கோட்டில் இருக்கும்.

அதனால் ஏற்படும் கடுமையான ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியின் சுழற்ச்சி வோகம் தடைப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை அப்படி நடக்குமானால் உலகம் அழிவு நிச்சயம் நடந்தேறலாம்.

ஆனால் அப்படி நடக்கும் போது பலர் தப்பிப் பிழைப்பதற்க்கும் வாய்ப்பு உண்டு என சொல்லப்படுகிறது.

அதனாலேயே மாயன் கலண்டரில் 21 நாட்கள் இடைவெளிக்குப் பின் மறுபடியும் கலண்டர் தொடர்கிறதாம்.

மறுபடியும் பீதிய கிளப்புறாங்களேப்பா...



ஞாயிறு, 12 மே, 2013

கனடாவில் உதமயாமன வன்னி வீதி




தமிழ் மக்கள் அதிகமானோர் வசித்து வரும் மார்க்கம் (Markham) மாநகராட்சியில் மிடில்பீல்ட் (Middlefield Rd)  மற்றும் மார்க்கம் சாலைகளின் (Markham Road) இடையே உள்ள 14 வது அவென்யூவில் (14th Ave)  ”வன்னி தெரு” என்ற புதிய வீதி நேற்று சனிக்கிழமை, மே 11, 2013 காலை 10:00 மணியளவில் உதயமாகியுள்ளது.

இந்தத் திறப்பு விழா நிகழ்விற்கு தமிழ் மக்கள் மற்றும் மார்க்கம் மாநகராட்சி தலைவர் ஸ்கார்பெட்டி (Frank   Scarpitti ), கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் ஆர்வலர்கள் நிகழ்வினில் கலந்து சிறப்பித்தனர்.


      









திங்கள், 6 மே, 2013

தன் காதலை தன்னோட வருங்கால மாமனாருக்கு நாசூக்காக கூறிய இளைஞன் (வீடியோ இணைப்பு)




நம்மாளுங்க ஒவ்வொருதருக்கும் காதல் அனுபவம் கண்டிப்பா இருக்கும்,
அதுல‌ காதல்ல ஜெயிச்சவங்களா இருந்தாலும் சரி காதல்ல தோத்தவங்களா இருந்தாலும் சரி ஒவ்வொருத்தருக்கும் காதல் மேல ஒரு தனிப்பட்ட அபிப்பிராயம் இருக்கும்.

அந்த வகையில் விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து காதல் கல்யாணம் பன்னினவங்க அவங்களோட தனிப்பட்ட கருத்த சொல்லி இருக்காங்க அதுல ஏத்துக்ககூடிய கருத்தும் இருக்கு.

ஆனா பொதுவா பாத்தா ஏத்துக்க முடியாதுனு சொல்லுறவங்க நிறைய பேர் இருப்பாங்க அவங்க மேலையும் தப்பில்ல ஆனாலும் இதுல காதல் கல்யாணம் தப்புனு சொல்றவஙளா இருந்தாலும் சரி தப்பில்லனு சொல்றவஙளா இருந்தாலும் சரி இந்தெ ரெண்டு வேறு பட்ட கருத்துக்கள் கொண்டவங்க மேலயும் தப்பு இல்லைனு தான் சொல்லனும்.

ஏன்னா என்னைய பொறுத்தவரைக்கும் காதல் கல்யாணம் பன்னி சந்தோஷமா இருந்தவங்களையும் பாத்திருக்கேன் அதே போல இந்த நிகழ்ச்சில சொல்ற மாதிரி கஷ்டப்பட்டவங்களையும் பாத்திருக்கேன் அதால ஒவ்வொருத்தரோட குடும்ப சூழ்னிலை மட்டுமே அவங்க கல்யாணத்துக்கு பின்னான எதிர்காலத்துக்கு காரணம்.

அதனால அவங்க அவங்க குடும்ப சூழ்னிலைய மனசில வைச்சுக்கொண்டு அவங்களோட காதல அவங்களோட குடும்பத்துக்கு தெரியபடுத்தி காதலிலும் வெற்றி பெற்று கல்யாணம் மற்றும் கல்யாணத்திற்கு பின்னான எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழணும்.











சனி, 4 மே, 2013

உலகத்திலே அதிகளவான செலவில் உருவாக்கப்பட்ட விளம்பரம் (கலக்கல் வீடியோ இணைப்பு)





மோட்டார் வாகன உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹோன்டா தனது வாகன‌ உற்பத்தியை பெருக்க ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.

பெரும் பணச் செலவில், மகிழுந்து உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரத்தினை காணொளியில் நீங்களும் பார்க்கலாம்.

இது, உலகத்திலே அதிகளவான செலவில் உருவாக்கப்பட்ட விளம்பரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.







வியாழன், 2 மே, 2013

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்.



முதல்ல எல்லோருக்கும் என்னோட வணக்கத்த சொல்லி என்னோட பதிவ பத்தி கொஞ்சம் சொல்லிட்டு பதிவுக்கு போகலாம்னு நினைக்கிறேன்..

அதாவது எனக்கு கொஞ்ச நாளா புத்தகம் படிக்கிற ஆர்வம் வந்ததின் விளைவு நானும் ஒரு பதிவரா (?!?!?) காலத்தின் 
கட்டளையை ஏத்து உங்க முன்னால 
நிக்கிறேன்னு பெருமையோட சொல்லிக்கிறேன்.

ஆமா உன் ப்ளாக்கில நிறைய பதிவு இருக்கே இந்த பதிவுக்கு மட்டும் ஏண்டா இவ்வளவு பில்ட் அப் குடுக்கிறேனு தானே உங்க மனசுக்குள்ள கேக்குறீங்க ?? (மைண்டு வாயிச காட்ச் பன்னிட்டேன் ஹிஹி) அதாவது நான் கொஞ்ச பதிவுகள ஏர்க்கனவே போட்டிருந்தாலும் அதுல பாதிக்கு மேல ஈயடிச்சான் காப்பி தாங்க... (ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன சமூக சேவை) 
ஆனா அத சொல்றதுக்கு நான் ஒன்னும் வெக்கப்படல ஆயிரம் பேர கொன்னா தாண் அரை டாக்டர் ஆகலாம்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க சோ... நான் ஆயிரம் பதிவ கூட சுடலைங்க ஏதோ அஞ்சு பத்து தாண். ( செஞ்ச மொள்ளமாரி தனத்த மறைக்க எவ்வளவு பக்க டயலாக்கு..ஸ்ஸப்ப்ப்பா....) 

மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா என்னைய விட உங்க எல்லாருக்கும் அவர பத்தி நிறையவே தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் நான் படிச்ச எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் எங்குற புத்தகத்தில நம்ம தலைவர் எம்.ஜி.ஆர் பத்தி நான் படிச்சு ஆச்சர்யப்பட்ட பல விஷயங்கள உங்களுக்கு பதிவா தரலாம்னு ஒரு யோசனை வந்ததால இந்த பதிவ எழுதுறேன்.
        

அவர பத்தி தெரியாதவங்க ஒரு சிலர் இருந்தா அவங்க இத படிச்சு தெரிஞ்சுக்கிட்டா கூட நான் எழுதுறதுக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்குனு நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன் ( இதுக்கு மேலயும் என்னோட இந்த பதிவ தொடர்ந்து படிக்கலைன்னா நான் அழுதுடுவேன்.. அப்பிடின்னு உங்க எல்லோருக்கும் எச்சரிக்கை விடுகிறேன் ஹிஹி )

எம்.ஜி.ஆர பத்தி சொல்லனும்னா ஒரு பதிவு போதாது அதனால நான் ரசிச்ச மற்றும் வியந்த விஷயங்கள மட்டும் பதிவா எழுதுறேன்


சரி இப்போ பதிவுக்கு வருவோம்....



19777‍ ‍ல் எம்.ஜி. ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். கர்னாடக மானிலத்தில் அப்போது முதல்மைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டுராவ் பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வர வேணும்னு எப்பவும் அழைச்சுட்டே இருப்பார் குண்டுராவின் பிறந்த நாளுக்கு அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

பிற்பகலில் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர் அவருடன் அவர் மனைவி ஜானகி அம்மா மற்றும் ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர்

மறு நாள் கர்னாடக முதலைமச்சர் குட்ண்டுராவின் பிறந்த நாள் விழாவை முடித்துக்கொண்டு காலை பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினார்கள்

11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெய்யில், இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெய்யிலில் தவித்துக்கொண்டிருந்தனர். கொஞ்ச தூரம் நடந்து , பிறகு வெய்யிலுக்காக ஓரமாக நின்று பிறகு மீண்டும் நடை.

'ராமசாமி காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். ராமு போய் அவங்களை விசாரிச்சுட்டு வா என்றார்.

'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக்கிழவி. தூரத்தில் இருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்.. என்றார்'

உடனே தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடமும் அவர்கள் அணிந்திருந்த செருப்புக்களை கொடுக்கச்சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பெட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து செருப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை கொடுக்கச்சொன்னார் எம்.ஜி.ஆர்.

எதிர்பாராமல் இவ்வளவு பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்னுமே புரியவில்லை. 

காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர் பின்பு அங்கிருந்து புறப்பட்டார். 
                                         
தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் இல்லாம கேக்காதவங்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்றது தான் எம்.ஜி.ஆரின் குணம்.

                                                       ***

கே.ஜே ஆஸ்பத்திரியில் ஸ்டண்ட் நடிகர் ராமகிருஷ்ணன் என்பவர் சண்டைக்காட்சியில் தவறுதலாக அடிபட்டு எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவரை பார்க்க தினமும் வருவார் எம்.ஜி.ஆர்.

நடிகையர் திலகம் சாவித்திரியும் அதே ஆஸ்பத்திரியில் மஞ்சல் காமாலை  நோயால் அவர் ப்âஅதிக்கப்பட்டதால் டைரக்டர் ஏ.சுப்புராவ் அவரை இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருந்தார். பணமில்லாததால் தான் கஷ்டப்படுவதாக ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார் சாவித்திரி.

அதற்கு பறு நாள் ராமகிருஷ்ணனை எம்.ஜி.ஆர் பார்க்க வந்த போது இங்கு சாவித்திரி சிகிச்சை பெறுவதை அவரிடம் கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.

சாவித்திரியை எம்.ஜி.ஆர் அவரது ஆஸ்பத்திரி அறையில் சந்தித்தார் . ' எனக்கு ஆதரவாக இப்போ யாரும் இல்லை கஷ்டமாக இருக்குண்ணே...' என்று எம்.ஜி.ஆரிடம் கூறினார் சாவித்திரி.

நல்ல செல்வாக்கில் வாழ்ந்த சாவித்திரியின் நிலமை எம். ஜி.ஆரை மிகவும் பாதித்து விட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகியை அழைத்து சாவித்திரியின் சிகிச்சைக்கான முழு செலவையும் தானே கட்டுவதாக உறுதி அளித்தார்.

ஒரு மாதம் சாவித்திரி அங்கு தங்கி சிகிச்சை பெற்றதுக்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டி , செட்டில் பண்ணினார் எம்.ஜி.ஆர்.

                                                       ***

எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதற்கு முன் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஒரு வீட்டில் தன் தாய் , சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரோடு வசித்து வந்தாற் எம்.ஜி.ஆர். அன்றாட சாப்பாட்டுக்கே சில சமயம் கஷ்டப்பட்ட நேரம் அது.

ஒரு ஜப்பானிய தம்பதியினர் வீட்டில் சமையல்காரராக பணி புரிந்து வந்த ராமன் குட்டி என்ற குடும்ப நன்பர் எம்.ஜி.ஆருக்கு ஐந்து ரூபாய் குடுத்து உதவினார். அந்த பணத்தில்  அரிசி வாங்கி சாபிட்டது, மிகவும் தேவைப்பட்ட போது அவர் உதவியதை நினைவில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

பின்பு ஹீரோவானதும் அவரைத்தேடினார் எம்.ஜி.ஆர், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஜப்பானிய பெண் ஒருத்தியை மணந்து , ராமன் குட்டி என்ற நபர் ஜப்பானுக்கே சென்று விட்டார் என்ரு எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக டோக்கியோ நகரத்துக்கு சென்ற எம்.ஜி.ஆர் ஒரு நாள் நன்பர் ஒருவரை பார்க்க சென்ற போது நாயர் டீ ஸ்டால் என்ற டீ கடையை பார்த்த எம்.ஜி.ஆர் வியந்து போனார். காரை நிறுத்தச்சொல்லி உள்ளே சென்று விசாரித்தார் எம்.ஜி.ஆர்.

டோக்கியோ நகரில் நாயர் டீ கடையா ? ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் அந்தப் பெர்யர்ப்பலகை எழுதப்பட்டிருந்தது.

ஆர்வத்தில் காரில் இருந்து இறங்ட்கி ஊல்லே சென்று விசாரித்த எம்.ஜி.ஆருக்கு ஆச்சரியம்;

பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் குடும்ப நன்பராக இருந்தவரும் கேரளாவில் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரராக இருந்தவருமான ராமன் குட்டி தான் அந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் என்று அறிந்ததும் எம்.ஜி.ஆருக்கு ஒரே மகிழ்ச்சி.

வயதாகி விட்ட போதிலும் ராமன் குட்டிக்கு எம்.ஜி.ஆரின் மீது பாசம் குறையவே இல்லை, எம்.ஜி.ஆர் வாழ்க்கை, திரைப்பட விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பற்றிக்கேட்டறிந்து மகிழ்ந்தார்.

என் திருப்திக்கு அவருக்கு வேண்டிய பணம் கொடுத்தேன்; எனக்கு மனம் நிறைவாக இருக்கு... என்று கூறினார் எம்.ஜி.ஆர்.

நன்றி மறவாமல் பல ஆண்டுகள் சென்றும் , வேறு நாடு சென்றிருந்த போதும் தனக்கு உதவியவரை தேடி பணம் கொடுத்து மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

                                                          ***

1977 சட்டசபை தேர்தல் நடைபெற்றது, அ.தி.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டார் அழகு திருநாவுக்கரசு, சவுரி ஐய்யங்கார் என்ற உள்ளூர் பெரும் பணக்காரர், பெரிய மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார் . இரவு ஏழரை மணிக்கு அந்தக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேச வேண்டும். ஆனால், வழியில் பல கூட்டங்களில் பேசிவிட்டு எம்.ஜி.ஆர் மன்னார்குடி வந்து சேர்ந்த போது நல்லிரவு 2 மணி.

இரவு பத்து மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகள் அப்போது வரவில்லை.

இரண்டு மணிக்கு பேச்சை ஆரம்பித்த எம்.ஜி.ஆர், இந்தக்கூட்டத்துக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் சில மணி நேரம் தாமதமாக வர நேரிட்டது. அதர்க்காக உங்கள் அனைவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.. என்றார்.
'நீங்க ஒன்னும் மன்னிப்பு கேக்க வேண்டாம் நீங்க இங வந்ததே எங்களுக்கு பெரிய சந்தோஷம்' என்றனர் கூட்டத்தினர். அவர்கள் அன்பையும் ஆதரவையும் இரு கரம் கூப்பி வணங்கி விட்டு பேச ஆரம்பித்தார்.

                                                           ***

கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பேசும்போது கருணாநிதியை பற்றி தன் பேச்சில் குறிப்பிடும் போது கலைஞர் கருணாநிதி என்றே குறிப்பிடுவார்.

யாரையும் மரியாதை குறைவாகப் பேசமாட்டார்.

சில கூட்டங்களில் பேசும்போது ' எனக்கு சொத்து எதுவும் வேண்டாம். நீங்க என்மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்க... உங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒரு வேளை சாபிட்டால் கூட , என் ஆயுசு பூராவும் சாபிடலாம். நீங்க தான் எனக்கு எல்லாம் என்று சொல்லுவார் எம்.ஜி.ஆர்.

                                                          ***

எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்த நேரத்தில், தமிழக அரசின் தலைமை செயலகத்திற்கு செல்லும்போது காருக்கு முன் பைலட் ஜீப் போகும் அதில் காவல்துறை அதிகாரிகள் இருப்பார்கள்.

TMX4777 என்ற அம்பாசிடர் காரில் பயணம் செய்வார் எம்.ஜி.ஆர்.

அவர் செல்லும் வழியில் டிராஃபிக்கில் எந்த மாற்றமும் இருக்காது. ரோட்டில் வண்டி ஓட்டுபவர்கள் யாரும் எம்.ஜி.ஆரின்  கார் கடப்பதற்காக தங்கள் வண்டிகளை நிறுத்த மாட்டார்கள்

ஒரு முறை தேனபேட்டை சிக்னல் அருகே, எம்.ஜி.ஆரின் கார் மீது ஒரு ஆட்டோ மோதி விட்டது. உடன் இருந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப டென்ஷனாகி விட்டனர். ' ஐய்யா, என்னை மன்னிச்சுடுங்கைய்யா... வண்டியிலே பிரேக் சரியா பிடிக்கல...' என்று பயத்தால் அழ ஆரம்பித்து விட்டார் அந்த ஆட்டோகாரர்.

பயப்படாதே!  என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் எம்.ஜி.ஆர்.

பிறகு ஆட்டோக்காரரிடம் 1500 ரூபாய் கொடுத்து ' வண்டியில ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தா சரி பண்ணிக்கோ... டிராஃபிக்கில பார்த்துப்போ! என்று அட்வைஸ் பண்ணினார்.

                                                      ***

1980 தேர்தல் சமயம் அ.இ.அ.தி.மு.க சார்பில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார் எம்.ஜி.ஆர். மதுரை அருகே வாடிப்பட்டி என்ற இடத்துக்கு எம்.ஜி.ஆர் சென்ற போது, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்கு அதே ஊருக்கு வந்திருந்தார் சிவாஜி கனேசன். அதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர் அங்கிருந்து சென்ற பிறகு நாம் போகலாம் என்றார்.

வண்டிகளை அருகில் இருந்த சந்துக்குள் போகுமாறு சொன்னார். சிலருக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை... ' நாம் ஏன் காத்திருக்க வேண்டும் ?? ' என்று கேட்டார்கள். ' சிவாஜியும் நானும் நெருங்கிய நன்பர்கள் . எங்களுக்குள்ளே எந்தப்பிரச்சனையும் எப்போதும் இருந்தது இல்லை. அவர் வந்து இருக்காரு. அவர் போன பிறகு நாம் போகலாம். தேர்தல் நேரத்துல எந்தப்பிரச்சனையும் வேண்டாம்...' என்று சொன்னார்.

                                                         ***

சிறிது நேரத்தில் சிவாஜியும் அவருடன் வந்தவர்களும் சென்ற பிறகு எம்.ஜி.ஆர் கிளம்பினார்.

சிறிது தூரத்தில் ரோட்டில் ஒரே கூட்டம். விசாரித்ததில், சிவாஜி குரூப்பில் சென்ற ஒரு கார், ஆறு வயது சிருவன் மீது மோதி அவன் இறந்து விட்டான் , கார் நிற்காமல் போய்விட்டது என்பது தெரிய வந்தது.

நடந்த விவரங்களை அறிந்ததும், சிறுவனின் தந்தையை அழைத்து அவரிடம் 25,000 ரூபாய் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

அவருடைய எட்டு வயது மூத்த மகனுக்கு, கல்லூரி படிப்பு வரை ஆகும் எல்லா படிப்பு செலவையும் தான் ஏற்பதாக அவருக்கு வாக்களித்தார் எம்.ஜி.ஆர்.
'சிவாஜிக்கு இந்த விபத்து நடந்தது தெரிந்து இருக்க நியாயம் இல்லை, தெரிந்திருந்தால் அவரும் உங்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பார்...' என்று சிவாஜிஜையும் விட்டுக்கொடுக்காமல் பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் பேசிய பிறகு தான் ஆயிரம் பேர் உள்ள அந்தக்கூட்டம் கலைந்து சென்றது. 

மறுநாள் காலையில் சிவாஜி தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஃபோன் செய்து, இரவு நடந்த விஷயங்களை சொல்லிவிட்டு, ' உங்க டிரைவரை ஜாக்கிரதையாக நிதானமாகப் போகச்சொல்லுங்க...' என்றார் என்.ஜி.ஆர். ' நடந்த விஷயம் எனக்குத் தெரியாது. யாரும், எதுவும் சொல்லலை. மூடி மறைச்சுட்டாங்க...' என்று வருத்தப்பட்டார் சிவாஜி.
 
                                      *******************

என்னங்க எம்.ஜி.ஆர் பத்தி பல தெரியாத விஷயங்கள் தெரிஞ்சுக்கீட்டீங்களா ?? 

அட இது பாதிதாங்க... அவர பத்தி சொல்ல என்னும் எவ்வளவோ இருக்கு ஆனா எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லீட்டா அப்புறம் வேற பதிவுக்கு நான் எங்க போறது ?? ஹிஹி அதனால பார்ட் 2 கூடிய சீக்கிரம் எழுதுறேன். 


இவ்வளவு நேரமும் அலை கடல் என திரண்டு வந்து (?!?!) என்னோட பதிவ பொறுமையா இருந்து படிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி 

உங்களுக்கு என்னோட பதிவு பிடிச்சிருந்தா பின்னூட்டத்தில கருத்து போட்டீங்கன்னா என் வலைப்பூவுக்கும் ஏதோ கொஞ்சப்பேர் வற்றாங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன் போனா போகுது உங்களால ஒருத்தன சந்தோஷப்படுத்த முடிஞ்சுதேனு போற போக்கில கருத்திட்டுட்டு போங்களேன் ( இந்தப்பொளப்பு பொளைக்கிறதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்னு தானே சொல்ல வர்றீங்க ? ஹிஹிஹி )  

மறுபடியும் எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் பார்ட் 2 ல  மீண்டும் சந்திப்போம்.

நன்றி.


**********************************************************************